Monday, January 11, 2010

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர்களுக்கான ஒரு புதிய சமூக இயக்கம். புதிய தலைமுறை செயல்வீரர்களை உருவாக்கி அதன் மூலம் கல்வி நிறுவனங்களை பலப்படுத்துவதே இதன் நோக்கமாகும். சமுதாய பிரச்சனைகளை எதிர்கொள்தல், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுதல் மற்றும் ஆக்கப் பூர்வமான செயல்பாடுகள் மூலம் கல்வி நிறுவனங்களில் ஒரு புதிய விடியலை உருவாக்கும் பணிகள் ஆகியவற்றில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னணியில் நிற்கும். நாட்டின் பல பாகங்களில் செயல்பட்டு வந்த மாணவர் இயக்கங்களிடையே நடைபெற்று வந்த தொடர் பேச்சுவார்த்தைகளின் பலனாக உருவாக்கப்பட்டது தான் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

சமூகத்தை கட்டியமைப்பதில் மாணவர்கள் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். கல்வி, தொலைநோக்கு பார்வை மற்றும் அறிவு ஆகிய சக்திகளை பெற்றவர்கள் மாணவர்கள். சமூகத்தில் ஒடுக்கப்பற்ற மக்களுக்கு இவை அனைத்தும் மறுக்கப்படுகின்றன. துரதிஷ்டசமாக கடந்த சில வருடங்களாக மாணவர்களிடையே ஆக்கப்பூர்வான செயல்பாடுகள் குறைந்து வருவதை நாம் கண்டு வருகிறோம். ஒரு காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவைகளாக கருத்தப்பட்ட மாணவர் இயக்கங்கள் இன்று அவை சார்ந்த அரசியல் கட்சிகளிடம் தஞ்சமடைந்து விட்டன. இக்கட்டான இச்சூழலில் மாணவர் சக்தியை உயிருட்டுவதற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முயற்சி செய்யும். மேலும் சமூக இயக்கங்களை முன்னெடுத்து செல்வதற்கான உந்துதலையும் மாணவர்களுக்கு அளிக்கும்.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நவம்பரில் 7,2009 அன்று புதுடில்லியில் உள்ள இந்தியா சர்வதேச அரங்கில் (India Internatiional Center) நடைபெற்ற தேசிய மாணவர்கள் கூட்டதில் அதிகாரப்புர்வமாக அறிவிக்கப்பட்டது. பல்வெறு மாநில நிர்வாகிகள் இக்கூட்டதில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டதில் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் இ.எம். அப்துர்ரஹ்மான், சோஷியயல் டெமாக்ரெடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் ஏ.சயீது, Economic and Political Weekly கட்டுரையாளர் கவுதம் நவ்லாக்கா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மதிய அமர்வில் 'சமூக மாற்றத்தில் மாணவர்கள்' என்ற தலைபில் கருத்தரங்கம் நடைபெற்றது. தேஜஸ் நாளிதழின் பேராசிரியர் P. கோயா, டில்லி பல்கலைகழக பேராசிரியர் ஷம்சுல் இஸ்லாம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் தனிக்கா சர்க்கார் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் சந்திப் சிங் மற்றும் எஸ்.ஏ.ஆர். ஜீலானி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment